வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு! – இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள் இன்று காலை கிளிநொச்சியில் கூடி முடிவெடுத்தனர் என அறியவந்தது.

தமிழரசுக் கட்சியின் இதுவரை இயங்கிய மத்திய குழு உறுப்பினர்கள் இன்று கிளிநொச்சியில் தமக்குள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்தக் கூட்டத்திலேயே வழக்கை எதிர்கொண்டு நீதிமன்ற கட்டளைப்படி விடயங்களை முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கின்றது.

வழக்காளிகளுடன் பேசுவதற்கு இதுவரை கட்சியின் பதில் பொதுச் செயலாளராக இருந்த வைத்தியர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மேயர் தி.சரவணபவன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலாதன் ஆகியோர் கொண்ட குழு இன்றைய கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் பங்குபற்றவில்லை அவர்களுக்கு எதிராகக் காரசாரமான கருத்துக்கள் கூட்டத்தில் பங்குபற்றிய சிலரால் முன்வைக்கப்பட்டன என அறியவந்தது.

வழக்குகளைச் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் சமரசமாக தீர்க்கும் கருத்தியல் இன்றைய கூட்டத்தில் பிரதிபலிக்கவில்லை. வழக்காளிகள் நிபந்தனையின்றி வழக்குகளைக் கை வாங்காவிட்டால் சட்டப் போராட்டம் நடத்தத் தயார் என்று உறுதியாக பேசப்பட்டது என அறியவந்தது.

புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆர். ஆர். காலமானார்!

ராவணன் அருவியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

கோவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு நோய்கள் ஏற்படும் அபாயம்.

நெதர்லாந்தில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரம்…தேர்தல் ஆணையர் சென்னை வருகை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் கைது.

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் நீதி நடவடிக்கைகளில் 729 குற்றவாளிகள் கைது.

IMF சீர்திருத்தங்கள் சரியாக செய்யப்படாவிட்டால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பொறியியலாளர் ஒருவர் கைது.

போராடினால் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை – விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு!

த.வெ.க. முதல் மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டம்!

சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

சாலை விபத்தில் பலியான எம்.எல்.ஏ லாஷ்ய நந்திகா.. தெலுங்கானாவில் அதிர்ச்சி

இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் இம்முறை கச்சதீவு திருவிழாவில் பங்கேற்கக்கூடாது! – இராமேஸ்வரம் விசைப் படகுச் சங்கத் தலைவர் கோரிக்கை

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு! – இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.

Leave A Reply

Your email address will not be published.