சாந்தன் இலங்கை வருவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி.

இந்தியாவின் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் 2022இல் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் விடுவிக்கப்பட்டாா். அதன் பின்னா், அவா் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தாா்.

சாந்தனுக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவா் திருச்சி அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாா்.

உயா் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவா், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்குப் பல்வேறு உடல் நலப் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவா்கள் கூறினா்.

இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருக்கின்றன என்றும், அதேவேளையில் பிற பாதிப்புக்களுக்குத் தொடா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இந்தநிலையில் இலங்கையைச் சேர்ந்த சாந்தனை நாட்டுக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதிக் கடிதத்தை அனுப்பியுள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்திய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

உறவினர் திருமணம்: பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல்

விவசாயிகளின் கருப்பு தினம்; உருவபொம்மையை எரித்து தீவிர போராட்டம் – தலைநகரில் பதற்றம்!

பஞ்சாபில் ‘கருப்பு தினம்’ அனுசரித்து விவசாயிகள் போராட்டம்

கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு

5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

Leave A Reply

Your email address will not be published.