கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு

சென்னையை அடுத்த நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் இரண்டாவது ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்திசெய்ய நெம்மேலியிலும், மீஞ்சூரை அடுத்துள்ள காட்டுப்பள்ளியிலும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் தலா 10 கோடி லிட்டர் நீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நெம்மேலியில் நாள்தோறும் 15 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக மாற்றும் இரண்டாவது ஆலை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 516 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் திறந்துவைக்கிறார்.

இந்தத் திட்டத்தின் மூலம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், உள்ளகரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளைச் சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

குற்றச் செயல்களைச் செய்துவிட்டு இந்தியாவுக்குத் தப்பிச் சென்ற வாள்வெட்டுக் கும்பல் நபர் , யாழ்.விமான நிலையத்தில் கைது

மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ரணிலே! – ஹரின் புகழாரம்; சஜித் அணிக்கும் அழைப்பு.

யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

5 1/2 மாத குழந்தை அறையில் தனியே விட்டு , வெளிநாடு சென்ற இளம் தாயும் தந்தையும்!

தனியார் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.