ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிக மெர்சென்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை அவர்களது “ப்ரீ வெட்டிங்” நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில், ஒரு கோயில் வளாகத்தில் 14 புதிய கோயில்களை கட்ட அம்பானி குடும்பம் ஏற்பாடு செய்துள்ளது. அதில் நுட்பமாக செதுக்கப்பட்ட தூண்கள், கடவுளர்களின் சிலைகள், ஓவியங்கள் என அனைத்தும் இடம்பெற உள்ளன. இது இந்தியாவின் மிகச் சிறந்த கலச்சார மற்றும் ஆன்மிக சின்னமாக விளங்கும் என கருதப்படுகிறது.

இந்த கோயில், கோயில் சிலைகள் அனைத்தும் பழங்கால கட்டிட கலையை பயன்படுத்தி கட்டப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய கலைஞர்களின் திறமைகள் முன்னிலைப்படுத்தபப்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய கலைகள், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகிவற்றை பாதுகாக்க ரிலையன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானியின் முயற்சிகளையும் வெளிப்படுத்தும்.

இது குறித்து தெரிவித்த உள்ளூர் கட்டிட கலைஞர்கள், தங்களின் கட்டிட கலைகளையும் அதன் நுட்பத்தையும் நீட்டா அம்பானி பாராட்டியதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சென்ட் திருமணத்தில் தாங்களும் பங்கேற்பது போல் உணர்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்வில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் நிகழ்வில் பங்கேற்க உள்ள விருந்தினர்கள் மார்ச் 1 ஆம் தேதி ஜாம்நகர் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன, கைதிகள் மாந்தீவுக்கு?

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுங்கள்! – இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்.

போலி விசாக்களுடன் நால்வர் சிக்கினர்!

கொழும்பில் துப்பாக்கிச்சூடு! 54 வயதான நபர் படுகாயம்!!

எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! – நீதி அமைச்சர் விஜயதாஸ சுட்டிக்காட்டு.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம்: அரசியல் கட்சிகளுக்குத் தெரிவிப்பதற்கு முடிவு!

அடையாளம் தெரியாத நான்கு சடலங்கள் மீட்பு!

எமது அரசு, பொதுமக்களின் சொத்துக்களை கையகப்படுத்த வந்தால் பொல்லால் அடியுங்க – அனுரகுமார திஸாநாயக்க

ஆனந்த் அம்பானியின் திருமணத்தை முன்னிட்டு 14 புதிய கோயில்கள் கட்டும் ரிலையன்ஸ்!

Leave A Reply

Your email address will not be published.