மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ : மாத்தளையில் நிறைவேறியது தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்கும் யோசனையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்ஷ தலைமையில் மாத்தளை சேசத்த ஹோட்டலில் நடைபெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் எனவும், தோல்வியடைந்தால் பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் .ரணில் விக்கிரமசிங்கவுடன் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மொட்டுவின் பல அமைச்சர்கள் “நாமலுக்கு பைத்தியம்” என கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தீர்மானித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம், பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ குட்டியாராச்சி மற்றும் இந்திக்க அனுருத்த ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

More News

கடல் இணைய கேபிள்களை உடைத்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் : இணையத்தை இழக்குமா இலங்கை..?

இலங்கையிலிருந்து புறப்படவிருந்த 7 விமானங்கள் ரத்து : கொதி நிலையில் பயணிகள்

வெள்ளவத்தையில் ஹோட்டல் ஒன்றை நோக்கித் துப்பாக்கிச்சூடு!

புத்தூரில் வீடொன்று தீக்கிரை.

எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.

எம்.பி. பதவியை துறந்தார் உத்திக.

ககன்யான் திட்டம்: விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்கள் – அறிமுகம் செய்த பிரதமர் மோடி!

‘இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்’ – மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு…

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு: 137 பேர் மீது வழக்கு!

இன்று மாநிலங்களவை தேர்தல் – மாற்றி வாக்களிக்கும் MLA’க்கள்? உச்சகட்ட பரபரப்பு

இலங்கைக் கடல் எல்லையில் மார்ச் 3 இல் கறுப்புக்கொடிப் போராட்டம்! – யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புக்கள் அறிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.