NPP அரசாங்கமும் IMF உடன் பயணிக்கும்

தேசிய மக்கள் சக்திகளின் ஆட்சியில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை தீர்க்க சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிடுகின்றார்.

இலங்கை , சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற கடனை மறுசீரமைப்பதற்கு மத்தியஸ்தராக நிதி நிதியத்தை தொடர்பு கொள்ளும் என்றும், ஆனால் கடனை மறுசீரமைப்பதில் நிபந்தனைகளுக்கு அடிபணிய விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.

பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டம் தேவை என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

மக்களுக்குப் பாதகமான நிலைமைகளைத் திருத்தி சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை அடுத்த தேர்தலில் எதிர்பார்ப்பதாகவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக் கருத்துக்களை வெளியிட்டார்.

விபத்தில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமானே

தமிழரசுக் கட்சியின் கிளைகளை இலங்கைக்கு வெளியே அமைப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை! – நிலைமையைத் தெளிவுபடுத்துகின்றார் பதில் பொதுச்செயலாளர்.

‘ஸ்பைடர் மேன்’ பிரியாணி.

முதல் ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றது.

தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளை தரம் பிரிப்பதற்கு பதிலாக, ஒரே தரத்துக்கு ……

தமிழர்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைக்கவே இல்லை! – இப்படிக் கூறுகின்றார் பொன்சேகா.

மொட்டுவின் வேட்பாளர் யார்? விசேட கூட்டத்துக்கு அழைப்பு.

போதைப்பொருள் வியாபாரி வாளால் வெட்டிப் படுகொலை – கம்பஹாவில் பயங்கரம்.

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன் கைது

Leave A Reply

Your email address will not be published.