ராமநத்தம் அருகே சாலை விபத்தில் இளைஞர்கள் 3 பேர் பலி

ராமநத்தம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர்கள் 3 பேர் பலியாகினர்.

கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், பாசார் பகுதியைச் சேர்ந்த திலீப்குமார் மகன் சதீஷ்குமார்(20), கலியபெருமாள் மகன் பழனி(20), வேப்பூர் புதுமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன்(20). இவர்கள் மூன்று பேரும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் நண்பர்களை பார்க்க சென்றனராம்.

பின்னர் இரவு சொந்த ஊரான பாசார் நோக்கி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். திங்கட்கிழமை அதிகாலை சுமார் 1.15 மணி அளவில் ராமநத்தம் காவல் சரகம், ஆவட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சதீஷ் குமார், வெங்கடேசன் இருவரும் நிகழிடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இதையடுத்து மூன்று பேர் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரனை நடத்தி வருகின்றனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)

மேலதிக செய்திகள்

வடக்கில் 70 வீதமான வன்புணர்வுகள் சிறுமிகளின் சம்மதத்துடனே என்று பொலிஸார் அதிர்ச்சித் தகவல்.

உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம்!

யாழில் வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!

வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி! – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உண்மைகள் தெரிந்தால் தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்! – மைத்திரியிடம் சஜித் வேண்டுகோள்.

தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் இழுத்து திருச்செல்வம் சாதனை!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?

கடலில் மூழ்கிப் பாடசாலை மாணவி பரிதாபச் சாவு!

அரசியல் கூட்டணியா? மே மாதத்துக்கு பின் வாருங்கள்! – எதிர்க்கட்சிகளிடம் சந்திரிகா அறிவுறுத்து.

நோ லிமிட் தீ கட்டுப்படுத்தப்பட்டது… நடந்தது என்ன என்பது பற்றிய விரிவான விசாரணை!

சில அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது நான் நாட்டைப் பற்றியே சிந்தித்தேன் என்று ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

சுகாதார சேவையின் புதிய மாற்றத்துக்காக விரிவான கலந்துரையாடல் மிகவும் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையில் McDonald’s உணவகங்களை நடத்த தடை!

பிரதமர் சூட்டிய ‘சிவசக்தி’ பெயருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

இஸ்லாமிய பெண்கள் மீது கலர் தண்ணீர் ஊற்றிய இளைஞர்கள்- அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் ஒன்றரை வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்- மீட்ட தீயணைப்புத் துறை!

Leave A Reply

Your email address will not be published.