அகமதாபாத் விமான நிலையத்தில் 4 இலங்கை ISIS பயங்கரவாதிகள் கைது.

சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகளை குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் படை (ATS) , அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து நேற்று (20) கைது செய்துள்ளதாகவும், அவர்கள் நால்வரும் இலங்கையர்கள் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியதுடன், முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அகமதாபாத் சென்றதைக் கண்டுபிடித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவத்தை அடுத்து அகமதாபாத் விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அகமதாபாத் விமான நிலையம் அதாவது சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு மே 12 அன்று வெடிகுண்டு தாக்குதல் மிரட்டல் செய்தி ஒன்று வந்ததாகவும், விமான நிலைய வளாகத்தில் விரிவான சோதனை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் கடந்த சனிக்கிழமை (18-ந் தேதி) இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சுற்றுலா வந்து தம்பதியொன்று காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்காக மக்கள் இன்று வாக்களித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்து, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.