புதிய சட்டங்களை உருவாக்க , 200 திசைகாட்டி எம்.பி.க்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் : லால்காந்த.

“ஒரு நாட்டின் அரசியல் என்பது காலநிலை போன்று அடிக்கடி மாறும் ஒன்று. இன்னும் இரண்டு மாதங்களில் பல அரசியல் மாற்றங்கள் நிகழலாம். சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார். ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது” என ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. டி. லால்காந்த தெரிவித்தார்.

‘அதிடண ஓய்வு பெற்ற இராணுவம்’ எனும் இரத்தினபுரி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பி.கே. டி. லால்காந்த ,

“எதிர்வரும் எந்த தேர்தலுக்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது. பொஹொட்டுவையில் உள்ள சில தலைவர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்தாலும், பொஹொட்டுவையின் கீழ்மட்ட மக்கள் இன்று தேசிய மக்கள் சக்தியுடன் ஒன்றிணைந்துள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்த நாட்டை இரண்டு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தன. அந்த மக்கள் இன்னும் 5 வருடங்கள் நாட்டை ஆள முயற்சிக்கிறார்கள்.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி, புதிய அரசியலமைப்பை எழுதி புத்தகத்தை மாற்ற வேண்டும். அதற்காக தற்போது பாராளுமன்றத்தில் உள்ள 225 எம்.பி.க்களில் 200 பேர் திசைகாட்டி மூலம் நியமிக்கப்பட வேண்டும். இதனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் திசைகாட்டிக்கு மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் கிடைக்கும். 25 எம்.பி.க்கள் மறுபக்கம் இருந்தாலும் பரவாயில்லை.

அமைச்சர்கள் சிலர் ஆட்சியை கைப்பற்றி சட்ட விரோத சுரங்கங்களை தோண்டுகிறார்கள். கடந்த காலங்களில் உலக பாரம்பரிய சின்னமாக இருந்த சிங்கராஜாவில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி வீதி போடப்பட்டது. இதனால்தான், சமீபத்தில் நடந்த போராட்டத்தின் போது, பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரையும், , மக்கள் வேண்டாம் என்றனர். தேர்தலில் அரசியல்வாதிகளுக்கு மக்கள் வாக்களித்தது , அவர்களின் விருப்பப்படி வேலை செய்ய அல்ல.” என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.