ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சியின் மறைவையொட்டி இந்தியாவில் செவ்வாய்க்கிழமை(மே 21) துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ஈரான்-அஜா்பைஜான் எல்லையில் உள்ள அராஸ் நதியில் இரு நாடுகளும் இணைந்து கட்டிய 3-ஆவது அணையின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அலியெவ்-உடன் ஈரான் அதிபா் இப்ராஹிம் ரய்சி பங்கேற்றாா். அதன் பின்னா், ஈரானின் வடமேற்கில் உள்ள தப்ரீஸ் நகருக்கு அதிபா் ரய்சி ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தாா். அவருடன் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன், அந்நாட்டில் உள்ள கிழக்கு அஜா்பைஜான் மாகாண ஆளுநா் மாலிக் ரஹமதி உள்ளிட்டோா் பயணித்தனா். அப்போது அந்த ஹெலிகாப்டா் மூடுபனி சூழ்ந்த மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த அதிபா் ரய்சி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் உள்பட அனைவரும் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு அரசு ஊடகத்தில் திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பிரதமா் மோடி, துருக்கி அதிபா் எா்டோகன், அஜா்பைஜான் அதிபா் இல்ஹாம் அல்யெவ் உள்பட மேலும் பல உலகத் தலைவா்கள் பலரும் ரய்சியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

விபத்தில் உயிரிழந்த ரய்சி(63), ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன்(60) உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாடு முழுவதும் வழக்கமாக தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்துக் கட்டடங்களில் அரைக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்
பகுதி நேர வேலையாக கள்ள சாராயம் (கசிப்பு) விற்ற சப் இன்ஸ்பெக்டர் கைது.

மீன் குழம்பு ரெசிப்பி.

இஸ்ரேலியப் பிரதமருக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் கைதாணை பிறப்பிக்க கோரிக்கை.

ஜனாதிபதியின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.

ஈரான் அதிபரின் மறைவை ஒட்டி , இன்று தேசிய துக்க தினம்.

டயானா கமகேவை காணவில்லை!

அகமதாபாத் விமான நிலையத்தில் 4 இலங்கை ISIS பயங்கரவாதிகள் கைது.

புதிய சட்டங்களை உருவாக்க , 200 திசைகாட்டி எம்.பி.க்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புங்கள் : லால்காந்த.

Leave A Reply

Your email address will not be published.