தரம் 5 புலமைபரிசில் பரீட்சையில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்த மாணவி.

வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 194 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்த மாணவி.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு அரசினர் தமிழ்கலைவன் பாடசாலையில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
இவர்களில் நிசாந்தன் நிதர்சனா என்ற மாணவி 194 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார்.

நாளாந்தம் கூலிதொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் முதற் பிள்ளையாக பிறந்த நிதர்சனா சிறுவயதில் இருந்து பாடசாலையில் பரீட்சைகளில் முதல் நிலையினை பெற்று போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குரவில் பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மாணவியின் வீட்டிற்கு இதுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ளமுடியவில்லை வீட்டில் இருந்து 50 மீற்றர் தொலைவு வரை மின்சா இணைப்பு வந்துள்ளபோதும் இவர்கள் மின்சாரம் இல்லாத வீட்டிலேயே கல்விகற்று சித்தியடைந்துள்ளார்.

எந்த வித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலை கல்வியும் வீட்டுக்கல்வியுமாக கல்விகற்று வந்த மாணவி கொரோனா காலத்தில் பாடசாலை இல்லாத நிலையில் தொலைபேசி ஊடகா ஆசிரியர்கள் அனுப்பும் வினாக்கொத்துக்களை சரியா படித்து விடை எழுதியதுடன் சந்தேகங்களை பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு கல்வி கற்று இந்த சாதனையினை அடைந்துள்ளதாகவும்.

எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வந்து கிராமத்தில் பணிசெய்யவேண்டும் என்றும் நிதர்சனா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.