சுயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிறின் கப்பலால் இழப்பீடு கோரும் நாடு.

சுயஸ் கால்வாயில் எவர்கிறின் சரக்குக் கப்பல் சிக்கியதன் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யாமல் கப்பலை விட மாட்டோம் என்று எகிப்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதன்படி ,இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஒருவாரத்திற்கும் மேலாக சுயஸ் கால்வாயில் கப்பல் சிக்கியதால் 360க்கும் மேற்பட்ட கப்பல்கள் செல்ல வழியின்றி பெரும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ,இதற்காக சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பீடு தொகை கோரப்பட்டுள்ளது. எனினும் சட்ட ரீதியாக வழக்காடாமல் சுமுகத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக எகிப்து கால்வாய் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.