பிட்காயினை செலாவணியாக அங்கீகரிக்கும் திட்டமில்லை: நிர்மலா சீதாராமன்

நாட்டில் பிட்காயினை செலாவணியாக அங்கீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறுகையில், “”பிட்காயின் பரிவர்த்தனைகள் குறித்த தரவுகளை மத்திய அரசு சேகரிப்பதில்லை. பிட்காயினை செலாவணியாக அங்கீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “”நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் மாத காலத்தில் மத்திய அமைச்சகங்களும் துறைகளும் ரூ.2.29 லட்சம் கோடியை மூலதன செலவினமாக செலவிட்டுள்ளன. இது 2021-22-ஆம் ஆண்டுக்கான ரூ.5.54 லட்சம் கோடி பட்ஜெட் மதிப்பீட்டில் 41 சதவீதமாகும். கடந்த நிதியாண்டின் செலவினத்துடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் செலவினம் சுமார் 38 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்தார்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

பணவீக்கம் தொடர்பாக கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், “”சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களின் விலை உயர்வு நாட்டில் பணவீக்க அதிகரிப்புக்குக் காரணமாக உள்ளன. கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்களின் இறக்குமதியை இந்தியா சார்ந்திருப்பதால் உள்நாட்டிலும் அவற்றின் விலை அதிகரிக்கிறது.

னினும் முக்கியமான அத்தியாவசிய பொருள்களின் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து, அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய காலங்களில் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.