தீப்பிடித்து எரிந்த கட்டிடம்! – ஒருவர் பலி!!

பரிசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு
(12.20 மணி அளவில்) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வட்டாரத்தின் rue de Montreuil வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே தீப்பிடித்துள்ளது. மூன்றாவது தளத்தில் ஏற்பட்ட தீ, மிக விரைவாக மேற் தளங்களுக்கும் பரவியது. தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

45 வரையான தீயணைப்பு படையினர் களத்தில் போராடி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதில் காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

தீ பரவல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.