யாழில் எரிபொருள் விநியோகம் அதிகரிப்பு.

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று தொடக்கம் எரிபொருள் விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தகவல்களுக்கு அமைவாக இதுவரையில் தினமும் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட மேலதிகமாக 5 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, வடமராட்சி, சங்கானை பிரதேச செயலர் பிரிவுகளில் மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு 6 ஆயிரத்து 600 லீற்றர் பெற்றோல் தினமும் மேலதிகமாக விநியோகிக்கப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.