300 ரூபாய்க்காக 10ம் ஆண்டு மாணவியை துடைப்பத்தால் அடித்த அதிபர்! மாணவி மருத்துவமனையில்!

ஹட்டன், கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி 10ஆம் வருட பாடசாலை மாணவியொருவர் சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , மேலதிக சிகிச்சைக்காக திக் ஓயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி சாவித்திரி சர்மா தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் நடைபெறும் ஆசிரியர் பாராட்டு விழாவிற்கு , அதே பாடசாலையில் கல்வி கற்கும் தனது சகோதரன் 300 ரூபாவை வழங்காத காரணத்தினால் அதிபர் தனது சகோதரனை கடுமையாக திட்டியதாக தாக்கப்பட்ட பாடசாலை மாணவி தெரிவித்துள்ளார்.

அப்போது அவள், “ஐயா, என் தம்பியைக் திட்டாதீர்கள். அப்பா அருகில்தான் வேலை செய்கிறார். நான் என் தந்தையிடம் சொல்லி பணத்தைக் வாங்கித் தருகிறேன், ”என அவள் அதிபரிடம் சொன்ன போது, அந்த நேரத்தில் அதிபர் தன்னை துடைப்பக் கைப்பிடியால் கொடூரமாக தாக்கியதாக அவள் குறிப்பிட்டுள்ளார்.

தனது அலறல் சத்தம் கேட்டு தனது தந்தை பாடசாலைக்கு விரைந்து சென்று அதிபரிடம் இருந்து அவரை மீட்டதாக பாடசாலை மாணவி மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவியின் தந்தை தமக்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாகவும், தனது குடும்பத்தில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தனது மனைவி வீட்டு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்படி தனது நான்கு குழந்தைகளும் பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனது மகளை மீட்பதற்காக பாடசாலைக்கு சென்ற போது அதிபர் மற்றும் ஆசிரியர்கள் தன்னை திட்டி செய்து தாக்க முயற்சித்ததாக அவர் திம்புல பத்தனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் அதிபரிடம் வினவிய போது, ஒழுக்காற்று காரணங்களுக்காக சிறு தடியால் சில தடவைகள் பாடசாலை மாணவியை தாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பிரேரணையின் பிரகாரம், பாடசாலை மாணவர் தலைவர் , ஆசிரியர் பாராட்டு விழாவிற்காக பணம் வசூலிப்பதாகவும், பணம் கேட்டு மாணவியை தான் தாக்கவில்லை எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைக்கு வந்த பாடசாலை மாணவியின் தந்தை தன்னை தாக்க முற்பட்டமை தொடர்பில் திம்புல பத்தனை பொலிஸில் தான் முறைப்பாடு செய்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.