அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்… கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு..!

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படும் கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக காணப்படுகிறது. விலங்குகளின் உடல்களில் ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகள் கடிப்பதால் ஏற்படும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். நோய் தீவிரமடைந்தால் மூக்கில் ரத்தம் வடிதல், பற்களின் வேர்களில் ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகின்றன. நரம்பியல் கோளாறுகள், மன குழப்பங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கர்நாடக மாநிலத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 2,288 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் 53 குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 8ஆம் தேதி சிவமொக்கா மாவட்டம் ஹோசாநகர் தாலுகாவில் 18 வயது சிறுமியும், சிக்கமங்களூருவின் சிருங்கேரி தாலுகாவில் வசிக்கும் 79 வயது முதியவரும் குரங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

அதில், உத்தர கன்னடா மாவட்டத்தில் அதிகபட்சமாக 34 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், ஷிவமொக்காவில் 12 பேரும், சிக்கமங்களூரில் 3 பேரும் பதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையர் ரன்தீப் சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலதிக செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிவில் உடை பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்

கஞ்சா பயிரிட அமைச்சரவை ஒப்புதல்…

டெல்லி சென்ற அனுரகுமார , இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு (Video)

அமைச்சர் பதவியில் இருந்து கெஹலியவை உடன் நீக்குக! கையெழுத்து சேகரிக்கும் வேட்டை ஆரம்பம்.

கெஹலியவுக்கு எதிராக மீண்டும் பிரேரணையாம் – ஐக்கிய மக்கள் சக்தி திட்டம்.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் பல்கலை மாணவன் சித்திரவதை.

கடந்த 24 மணித்தியாலங்களில் 733 சந்தேகநபர்கள் கைது.

மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புற்றுநோய்.

திருமணத்திற்குப் புறம்பான உறவு காரணமாக பெண்ணொருவர் படுகொலை.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குடும்ப அட்டையில் பெயரை உறுதி செய்யாவிட்டால் நீக்கம்! நியாயவிலைக் கடை பணியாளா்கள் எச்சரிக்கையால் மக்கள் அதிா்ச்சி

அரசு பேருந்துகளில் இனி திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்: டெல்லி முதலமைச்சர்

சிம்லாவில் நிலச்சரிவு, 2 பேர் பலி!

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை விரைவில் சந்திக்கின்றார் மோடி!

மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பரிதாப உயிரிழப்பு – 9 மாதக் குழந்தை படுகாயம்.

கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் இந்தியாவில் கைது!

சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.