விவசாயிகளின் பாதையில் ஆணி அடிக்கும் பாஜக அரசு: ராகுல் காந்தி காட்டம்

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த மாதம் மணிப்பூரில் தனது 2 ஆம் கட்ட ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல்காந்தி, தற்போது சத்தீஸ்கரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, “மதங்கள், மொழிகளை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வினர் மாநிலங்களை ஒன்றுக்கொன்று சண்டையிட செய்கின்றன. ஆனால், இந்தியர்களின் டி.என்.ஏ.வில் அன்பு மட்டுமே உள்ளது.

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் வெறுப்புணர்வு பரவி வருகிறது. வரவிருக்கும் தலைமுறைக்கு அன்பு நிறைந்த தேசத்தை கட்டியெழுப்புவதே இந்த யாத்திரையின் நோக்கம்.

பிரதமர் மோடி விவசாயிகளை ஏமாற்றி வருகிறார். மோடி அரசு விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் விவசாயிகளின் கடன் 60% அதிகரித்த போதும் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கும் சட்டத்தை கொண்டு வரவில்லை.

விவசாயிகளின் பாதையில் ஆணி அடிப்பவர்கள் எந்த நம்பிக்கைக்கும் தகுதியற்றவர்கள். அவர்களை டெல்லியில் இருந்து வேரோடு பிடுங்கி எறிந்து விடுங்கள். காங்கிரஸால் விவசாயிகளுக்கு நீதியும் லாபமும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலதிக செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

ரயில் மோதி 14 வயது சிறுவன் சாவு! – தம்பலகாமத்தில் துயரம்.

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்.

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.

காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.

இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.