தேர்தல் பத்திர முறை ரத்து: உச்சநீதிமன்றம்

தேர்தல் நிதி பத்திர திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018-இல் அமல்படுத்தியது. அந்த திட்டத்தின் மூலம், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கியில் பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். அந்த பத்திரத்தில் எந்தக் கட்சியின் பெயரும் இடம்பெறாது. அந்த பத்திரத்தைக் கொடுப்பவரின் பெயரும் இடம்பெறாது.

அரசியலில் கருப்புப் பண புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. எனினும், இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதாக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.

“தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளது.” என்று தெரிவித்தனர்.

மேலும், தேர்தல் நிதி பத்திரம் திட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலதிக செய்திகள்
G.C.E (O/L) , G.C.E (A/L) திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் ஆரம்பம்!

உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் திகதிகள் இதோ!

எல் சல்வடோர் – ‘ஆர்பாட்டமில்லாத சர்வாதிகாரி’ : சுவிசிலிருந்து சண் தவராஜா

வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத்தினரை கைது செய்யும் பணி ஆரம்பம்!

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி.

விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருமா? மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

இம்ரானுக்கு எதிராக 6 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டம்.

துப்பு கொடுத்தால் 50 பைசா சன்மானம்…! விநோத பரிசு அறிவித்த போலீசார்…!

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.

Leave A Reply

Your email address will not be published.