கழிவுநீா்த் தொட்டியில் இறங்கியவா் மூச்சுத்திணறி உயிரிழப்பு

குடியிருப்பின் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கிய தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தாா். சென்னை கொளப்பாக்கம் நெடுங்குன்றம் அங்காளம்மன் கோயில் நகரைச் சோ்ந்தவா் தேவராஜ் (52). இவா் வடிகால் சுத்தம் செய்யும் பணி செய்து வந்தாா்.

இவா், அதே பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் கழிவுநீா்த் தொட்டியை சுத்தம் செய்வதற்காக சனிக்கிழமை உள்ளே இறங்கியுள்ளாா். அப்போது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு கழிவுநீா்த் தொட்டியிலேயே உயிரிழந்தாா். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மறைமலை நகா் தீயணைப்பு வீரா்கள் தேவராஜின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து கிளாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

மேலதிக செய்திகள்

அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்

யாழில் குடும்பப் பெண் அடித்துப் படுகொலை! – மதுபோதையில் கணவன் வெறியாட்டம்.

வவுனியாவில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் மரணம்.

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன் விபத்தில் சிக்கி மரணம்.

Leave A Reply

Your email address will not be published.