பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. ஒரே நாடு ஒரே தேர்தல், மக்கள் மருந்தகங்களில் 80% வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு தயார் செய்துள்ளது. 27 பேர் கொண்ட அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடம் பெற்றிருந்தார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டார். அதில் முக்கிய அறிவிப்புகள் வருமாறு..

  1. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்படும்
  2. 3 கோடி பெண் லட்சாதிபதிகள் உருவாக்கப்படும்.
  3. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் நீட்டிக்கப்படும்.
  4. 2025ஆம் ஆண்டு பழங்குடியின ஆண்டாக கொண்டாடப்படும்.
  5. 70 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் பயன்பெறலாம்.
  6. மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.
  7. 2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  8. முத்ரா யோஜனா கடன் உச்சவரம்பு 20 லட்சமாக உயர்த்தப்படும்.
  9. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.
  10. வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் விடப்படும்.

மேலதிக செய்திகள்

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க ஈரான் 100 ஏவுகணைகளை தயார் செய்கிறது

சித்திரைப் புத்தாண்டில் இருந்தாவது தமிழரசுக் கட்சி ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்! – சீ.வீ.கே

ரணிலுக்கு, ரெடியாகிறது டிரானின் கைத்தொலைபேசி சின்னம்

வெள்ளை வேனில் ஒருவர் கடத்தல் : பொலிஸாரால் மீட்பு

மேல்மாகாணத்தில் கைத்துப்பாக்கி அணி

இஸ்ரேல் மீது ஈரானிடமிருந்து 200 ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள்

கடைசி ஓவரில் அசத்திய ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி.

சர்வதேச ‘டி-20’ போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் விளாசினார் நேபாள அணி

பயணியர் பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 11 பேர் பலி.

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது.

தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., உண்மையான தலைவர் கைக்கு வரப்போகிறது. அண்ணாமலை.

Leave A Reply

Your email address will not be published.