இது 3வது முறை; தமிழகத்தில் வாக்குப்பதிவு மீண்டும் திருத்தம்

பதிவான ஓட்டு சதவீதத்தை 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி கூறியுள்ளது.

தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் ஓட்டு பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, அமைதியான முறையில் நடந்து முடிந்தது.

நாடு முழுவதும் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 1,58,568 வாக்குபதிவு எந்திரங்களும் 81,157 கட்டுபாட்டு எந்திரங்களும் 8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வாக்குப்பதிவு நிறைவடைந்து இரவு 7:00 மணிக்கு 72:09 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்ததாக, தேர்தல் கமிஷன் அறிவித்த நிலையில், நள்ளிரவில் அதனை மாற்றி, 69.46 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்தது.

இந்நிலையில், தொடர்ந்து தேர்தல் ஆணையம் தமிழக ஓட்டு சதவீதம் தொடர்பான விபரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. தற்போது 69.71 சதவீதம் என 3வது முறையாக மாற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது. குறைந்தபட்சம் என்றால் மத்திய சென்னையில் 53.96 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது.

மேலதிக செய்திகள்

செய்தி வாசித்தபோது மயங்கி விழுந்த பெண் அறிவிப்பாளர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தண்ணீரில் மூழ்கி பலி – நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.