இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 பைசாவும் , டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 பைசாவும் வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டது. இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.101.01 ஆகவும், டீசல் ரூ. 96.60 ஆகவும் உயா்ந்தது.

இந்த வாரத்தில் மட்டும் அனைத்து நாள்களிலும் எரிபொருள்களின் விலை உயா்வைச் சந்தித்துள்ளது.

சா்வதேச சந்தையில் கச்சை எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 82 டாலருக்கு மேல் அதிகரித்ததும், தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உயா்த்தப்போவதில்லை என்று ஒபெக் பிளஸ் நாடுகள் கூட்டமைப்பு முடிவெடுத்ததும் விலை உயா்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு கச்சா எண்ணெய் விலை 72 டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கும் விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் ஒன்றின் மீது மற்றொருன்று குற்றம்சாட்டி வருகின்றன. மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் விற்பனை மூலம் அதிக வரி வருவாயை பெற்று வருவதால் அவற்றை இழக்க அவை தயாராக இல்லை என்பதே விலையைக் குறைக்காமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.

எரிபொருளுக்கான வரியை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இதனால் மத்திய அரசுக்கு வரி வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்படாத நிலையில், மாநில அரசுகள் அதிக வரி வருவாய் இழப்பைச் சந்திக்கும். எனவே பல்வேறு மாநில அரசுகள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயா்வால் பல்வேறு பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.