”சென்னை வருகிறேன்” – தமிழில் ட்வீட் செய்த பிரதமர் மோடி…!

பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். மாலை 3 மணி அளவில் விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.

பின்னர் மாலை 3.50 மணி அளவில் சென்னை ஐஎன்எஸ் அடையார் செல்லும் பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கிறார்.

அங்கு சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மாலை 4:40 மணிக்கு, விவேகானந்தர் இல்லம் வரும் பிரதமர், ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்லும் பிரதமர், 6. 30 மணியில் இருந்து இரவு 7:30 மணி வரை, பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் மற்றும் முடிந்த திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “சென்னை விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.