பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரிக்க தனிப்படை அமைப்பு

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுளள்து.

சென்னையில் அண்ணாநகர், ஜெ.ஜெ. நகர், பெரம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளுக்கு இன்று முற்பகலில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், திருமழிசை, ஆர்.ஏ.புரம், ஜெ.ஜெ.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 15-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியோடு பள்ளிகளுக்குச் சென்று வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் இறுதியில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது புரளி என்று காவல்துறை தரப்பிலும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், வெடிகுண்டு புரளி குறித்து செய்திகள் பரவியதும் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும் பெற்றோர் குவியத் தொடங்கினர். இதனால், பள்ளி இருக்கும் பகுதிகளில் வசிப்பவர்களும், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகளைப் பார்த்தவர்களும் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்

சீனாவுக்கு ஐ.நா பொதுச்செயலாளரின் வாழ்த்துகள்.

காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டர்.

நெதன்யாகு ஹமாஸ் நிபந்தனைகளை தூக்கி எறிந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு.

ஜனாதிபதி அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

ஆற்றில் கிடைத்த சிலை… அயோத்தி ராமர் போலவே விஷ்ணு உருவம்!q

ஆற்றில் கிடைத்த சிலை… அயோத்தி ராமர் போலவே விஷ்ணு உருவம்!

உத்தரகண்டில் அத்தை, மாமாவின் மகள், மகனை திருமணம் செய்யத் தடை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சகல அரசியல் கட்சிகளுக்கும் மைத்திரிபால பகிரங்க அழைப்பு!

போன் மூலம் TIN நம்பர் பற்றி விவரம் கேட்டால் கொடுக்க வேண்டாம்.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 728 சந்தேக நபர்கள் கைது.

37 கோடி மதிப்பிலான ரத்தினக் கற்கள், அதன் உரிமையாளர் உட்பட இருவர் கைது.

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது.

ஊடகவியலாளரின் தந்தை காலமானார்!

வைத்தியசாலையில் வைத்து பெண் வைத்தியரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஆண் வைத்தியர் கைது!

மலையக மக்கள் முன்னணியின் மாநாட்டை ஏப்ரல் 26, 27 ஆம் திகதிகளில் நடத்தத் திட்டம்.

ஜகத் பிரியங்கர எம்.பியாகப் பதவிப் பிரமாணம்!

வாக்காளர் இடாப்பில் பெப்ரவரி 29 இற்கு முன் பெயர்களைப் பதிவு செய்க! – தேர்தல் ஆணைக்குழு அவசர வேண்டுகோள்.

யாழில் தென்னிந்திய நடிகைகளுடன் புகைப்படம் எடுக்க 30 ஆயிரம் ரூபாவா?அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என்று அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பு எச்சரிக்கை.

ரணிலின் மூளைச்சலவையாலேயே இந்தியா சென்றுள்ளார் அநுரகுமார – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மகிழ்ச்சி.

Leave A Reply

Your email address will not be published.