தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – சட்டப்பேரவையில் பரபரப்பு!

தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்துள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

தமிழ்நாடு அரசின் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடியது. தமிழ்நாடு அரசு சார்பில் தயாரிக்கப்பட்ட உரையானது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க ஆளுநர், முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தனர். தலைமைச் செயலகம் வந்த ஆளுநருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.

மேலும், தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக புறக்கணித்தார். தேசிய கீதத்தை தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்ற தனது கோரிக்கையை நிராகரிக்கப்பட்டதாக கூறி அவர் உரையை படிக்காமல் அமர்ந்தார். கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!

ரயில் மோதி 14 வயது சிறுவன் சாவு! – தம்பலகாமத்தில் துயரம்.

பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.

நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்.

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.

காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.

இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.

விவசாயிகளின் பாதையில் ஆணி அடிக்கும் பாஜக அரசு: ராகுல் காந்தி காட்டம்

ஜம்மு-காஷ்மீரில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலி!

Leave A Reply

Your email address will not be published.