திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை: மணமகன் உயிரிழப்பு!

ஹைதராபாத்தில் திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்ட மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியை சேர்ந்த லக்‌ஷ்மி நாராயண் விஞ்சன்(வயது 28) என்பவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி தனியார் பல் மருத்துவமனையில் பற்களை அழகுப்படுத்தும் ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சிறிது நேரத்திலேயே விஞ்சன் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, பல் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்ததாக விஞ்சனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் அளித்த விளக்கத்தில்,

“திருமணம் நடைபெறவிருப்பதால் உடனடியாக பல் அறுவை சிகிச்சை செய்ய விஞ்சன் கோரினார். அறுவை சிகிச்சை முறைப்படி செய்யப்பட்டது. அவருக்கு எந்த மருத்துவ பிரச்னையும் இல்லை.

இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் குறைந்த அளவிலேயே மயக்க மருந்து அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவரிடம் நன்றாகதான் பேசிக் கொண்டிருந்தார். இவை அனைத்து சிசிடிவியில் பதிவாகியுள்ளது. காவல்துறைக்கு விடியோ அளிக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்.

மேலதிக செய்திகள்

தேஷபந்து தென்னகோனின் பதவிக்காலம் முடிய 10 நாட்கள் : டிரான் மற்றும் தேஷபந்துவுக்கு கொலை மிரட்டல்!

பாகிஸ்தான் தேர்தல் , களவாடப்படும் வெற்றி! (Video)

நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள் – அண்ணாமலை தகவல்!

‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!

தில்லி நோக்கி ஜேசிபியுடன் புறப்பட்ட விவசாயிகள்: ஹரியாணா எல்லையில் கைது!

யாழ் பல்கலைகழக மாணவன் விபத்தில் பலி.

Leave A Reply

Your email address will not be published.