2 நாட்களில் 50 லட்ச பேர் – 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

தமிழக வெற்றிக்கழகத்தில் இது வரை 50 லட்ச உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் வரும் 2026-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். கட்சியை கடந்த மாதம் 2-ஆம் தேதி துவங்கிய அவர், கட்சியின் நிர்வாகிகளையும் அண்மையில் அறிவித்தார்.

வரும் மே மாதத்தில் தென்தமிழகத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி, கட்சியின் சின்னம் – கொடி போன்றவற்றை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளிவரும் நிலையில், அக்கூட்டம் திருநெல்வேலி அல்லது மதுரையில் நடைபெறக்கூடும் என்ற கூறப்படுகிறது.

அதே நேரத்தில், உறுப்பினராக கட்சியில் சுமார் 2 கோடி பேரை இணைத்திட வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியதை அடுத்து அதற்கான பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றார்.

கடந்த 8-ஆம் தேதி கட்சிக்கான தனியாக செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி கட்சியில் முதல் உறுப்பினராக விஜய் இணைந்தார். அதனை தொடர்ந்து பலரும் ஒரே நேரத்தில் செயலியை பயன்படுத்த முற்பட்டதால், செயலி சிறிது நேரம் முடங்கியது என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன.

இச்சூழலில் தான், உறுப்பினரா சேர்க்கும் பணி துவங்கி வெறும் 2 நாட்களாகிய நிலையில், தற்போது வரை 50 லட்ச உறுப்பினர்கள் கட்சியில் இணைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வெற்றிக் கழகத்தின் துணை செயலர் அறிவித்துள்ளார். இதில், உறுப்பினர் சேர்க்கை செயலி மூலமாகதான் அதிகம்பேர் உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலதிக செய்திகள்

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

மாமியார் சீக்கிரம் சாகணும்; மருமகள் வைத்த நூதன வேண்டுதல்

யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது – ஜாஃபர் சாதிக்கின் வாக்குமூலம்

ரணிலை ‘மொட்டு’ ஆதரிக்குமா? – அடுத்த சந்திப்பில் இறுதித் தீர்மானம்.

வெடுக்குநாறிமலை கோயிலில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் நாளை போராட்டம்! – தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு.

ஓட்டோவில் கடத்தப்பட்ட மாணவி கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை!

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து இரசித்த சுமந்திரன்!

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்!

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! – மேலுமொருவர் இலக்கு.

வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

Leave A Reply

Your email address will not be published.