இராணுவம் வசமுள்ள காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள 110 ஏக்கர் காணிகளை உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களிடம் மீளக் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பொதுமக்களிடம் காணிகளை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஜே94, ஜே 146, ஜே 235, ஜே 240, ஜே 241 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவ வசம் உள்ள 70 ஏக்கர் காணிகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் கே.என் 11, கே.என் 23, கே.என் 08, கே.என் 43, கே.என் 67, கே.என் 76 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இராணுவ வசம் இருந்த 40 ஏக்கர் காணிகளும் விடுவிக்கும் காணி ஆவணங்கள் மாவட்ட செயலாளர்களிடம் வழங்கிவைக்கப்பட்டன.

அதன்பிரகாரம் யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட 70 ஏக்கர் காணிகளுக்கான ஆவணம் பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனிடமும், கிளிநொச்சி மாவட்டத்தில் விடுவிக்கப்பட்ட 40 ஏக்கர் காணிகளுக்கான ஆவணம் கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்டச் செயலாளர் நளாயினி இன்பராஜிடமும் கையளிக்கப்பட்டன.
பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகர ரத்நாயக்க, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி சந்தன விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அதிகாரிகள், முப்படையினர், காணி உரிமையாளர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

மேலதிக செய்திகள்

யாழில் காணி மோசடி: பெண்ணொருவர் கைது!

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்! – வெடுக்குநாறிமலை அட்டூழியங்களை வன்மையாகக் கண்டிக்கின்றார் சுரேஷ்.

யாழில் விமானப்படைக் கண்காட்சிக்குக் கஞ்சாவுடன் வந்த பெண் கைது!

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் – மாற்று ஆடைகள் இன்றி அவர்கள் தவிப்பு.

பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

2 நாட்களில் 50 லட்ச பேர் – 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! – மேலுமொருவர் இலக்கு.

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்!

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து இரசித்த சுமந்திரன்!

ஓட்டோவில் கடத்தப்பட்ட மாணவி கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை!

வெடுக்குநாறிமலை கோயிலில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் நாளை போராட்டம்! – தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு.

ரணிலை ‘மொட்டு’ ஆதரிக்குமா? – அடுத்த சந்திப்பில் இறுதித் தீர்மானம்.

யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது – ஜாஃபர் சாதிக்கின் வாக்குமூலம்

மாமியார் சீக்கிரம் சாகணும்; மருமகள் வைத்த நூதன வேண்டுதல்

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

Leave A Reply

Your email address will not be published.