வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் – மாற்று ஆடைகள் இன்றி அவர்கள் தவிப்பு.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 8 பேரும் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

மகா சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்டவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்கள் எனவும், கைது செய்யப்பட்டர்களில் காயங்கள் காணப்படுகின்றன எனவும் கைது செய்யப்பட்ட 8 பேர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.

இதனையடுத்து, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேற்படி 8 பேரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் கொண்டு சென்று முன்னிலைப்படுத்துமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. அதற்கமைவாக இன்று சட்ட வைத்திய அதிகாரிடம் அவர்கள் அழைத்து செல்லப்பட்டார்கள்.

இன்று விடுமுறை தினம் என்பதால் சிறைக் கைதிகளைப் பார்வையிடுவதற்குச் சந்தர்ப்பம் இல்லை. இதனால் வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கான மாற்று ஆடைகள் வழங்குவதற்குக் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், சிறைக்காவலர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. இதனால் கடந்த இரு தினங்களாக அவர்கள் கைது செய்யப்படும்போது அணிந்திருந்த ஆடைகளே அணிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

யாழில் காணி மோசடி: பெண்ணொருவர் கைது!

மீண்டும் ஒரு மதப் பிரச்சினையின் ஊடாக இன மோதலுக்கு அத்திவாரமிடும் பொலிஸார்! – வெடுக்குநாறிமலை அட்டூழியங்களை வன்மையாகக் கண்டிக்கின்றார் சுரேஷ்.

யாழில் விமானப்படைக் கண்காட்சிக்குக் கஞ்சாவுடன் வந்த பெண் கைது!

வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் – மாற்று ஆடைகள் இன்றி அவர்கள் தவிப்பு.

பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு எதிராக யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனம்.

இந்திய மீனவர்கள் 22 பேர் கைது!

2 நாட்களில் 50 லட்ச பேர் – 2 கோடியை நோக்கி வேகமாக முன்னேறும் த.வெ.க..!

செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.

வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

தென்னிலங்கையில் தொடரும் துப்பாக்கிச்சூடுகள்! – மேலுமொருவர் இலக்கு.

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல்!

ரணிலுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியைப் பார்த்து இரசித்த சுமந்திரன்!

ஓட்டோவில் கடத்தப்பட்ட மாணவி கழுத்தறுக்கப்பட்டுப் படுகொலை!

வெடுக்குநாறிமலை கோயிலில் அரங்கேறிய பொலிஸ் அராஜகங்களைக் கண்டித்து நல்லை ஆதீன முன்றலில் நாளை போராட்டம்! – தவத்திரு அகத்தியர் அடிகளார் அழைப்பு.

ரணிலை ‘மொட்டு’ ஆதரிக்குமா? – அடுத்த சந்திப்பில் இறுதித் தீர்மானம்.

யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது – ஜாஃபர் சாதிக்கின் வாக்குமூலம்

மாமியார் சீக்கிரம் சாகணும்; மருமகள் வைத்த நூதன வேண்டுதல்

தில்லியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை! தொடரும் மீட்புப் பணி!

Leave A Reply

Your email address will not be published.