கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய இளைஞர் மரணம்.

கிளிநொச்சியில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மகதீஸ் அபிசாகன் (வயது 20) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற வேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகில் நின்ற வேலியுடன் மோதுண்டு தலையில் பலமாக அடிபட்ட நிலையில் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தி தனிநபர் சொத்தல்ல சஜித்தை மறைமுகமாகப் போட்டுத் தாக்கும் பொன்சேகா கட்சியில் இருந்து வெளியேறமாட்டேன் என்றும் தெரிவிப்பு.

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். வைத்தியசாலையில்…

மைத்திரிபால தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் இணையமாட்டோம் – விமல் எம்.பி. அறிவிப்பு.

அமைச்சர் கெஹலியவுக்கு வெளிநாடு செல்லத் தடை சி.ஐ.டியில் ஆஜராகுமாறும் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக இந்தியா உள்ளது: நிா்மலா சீதாராமன்

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.12.50 உயர்வு!

அயோத்திக்கு பாத யாத்திரையாக வந்து ஸ்ரீராமரை தரிசித்த 350 இஸ்லாமியா்கள்

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்: நிதியமைச்சர்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு.

ஒரு கையால் ராஜபக்சர்களை அணைத்தபடி மறுகையால் எம்மை அழைக்காதீர்கள். நாம் இப்போது இருக்குமிடமே எமக்கு செளக்கியம். புதிய கூட்டணிகள் பற்றி மனோ கணேசன்.

Leave A Reply

Your email address will not be published.