மன்னாரில் படையினர் அதிரடி வேட்டை! 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!!

இலங்கைக் கடற்படை, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது, மன்னார் – இலுப்பைக்கடவை தடாகத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமான பொருட்கள் நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் நோக்கில் கரையோர மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வழமையான நடவடிக்கைகளின்போது இந்தப் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள எஸ்.எல்.என்.எஸ். புவனேகாவால் இலுப்பைக்கடவை தடாகத்தில் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் உதவியுடன் நேற்று மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின்போது கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அருகே உள்ள புதர்களில் சந்தேகத்துக்கிடமான பெட்டியை மீட்டனர் .

இதன்போது 53 ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்பைக்கடவை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

More News
இன்றைய மேலதிக செய்திகள்

👉 அ.இ.ம.கா. கட்சியில் இருந்து முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது! – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

👉 யாழில் தனியாா் பஸ் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு இன்று மாலை தீர்வு உறுதி – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.

👉 மன்னாரில் படையினர் அதிரடி வேட்டை! 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!!

👉 இ.போ.ச. பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தனியாா் பஸ் உாிமையாளா்கள் போராட்டம் – யாழ்ப்பாணத்தில் பயணிகள் பெரும் அசௌகரியம்.

👉 சகல தனியார் பஸ் சேவைகளும் வடக்கில் முற்றாக இடைநிறுத்தம் – வெறிச்சோடிக் காணப்படும் பஸ் நிலையங்கள்.

👉 சீனா-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பலன்களைத் தரும்.

👉 பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் வரை 3 பில்லியன் டாலர் கடனை விடுவிக்கக் கூடாது.

👉 சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டக் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் ஆற்றிய உரை.

👉 வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு ஏற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை.

👉 புதிய பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் பதவியேற்றார்.

👉 முன்னாள் அமைச்சர் ரொனியின் பூதவுடல் ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு!

👉 புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

👉 அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!

👉 சர்ச்சையை கிளப்பிய ராக்கெட் ஏவுதளம் விளம்பரம் – அமைச்சர் அனிதா விளக்கம்!

👉 மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி!

👉 ரயில் மோதி தண்டவாளத்தில் நின்றிருந்த 12 பேர் பலி… ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.