தேர்தல் பிரசாரத்தில் திமுக எம்எல்ஏ திடீர் மரணம் – தொண்டர்கள் அதிர்ச்சி!

விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமானார்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் களம் தீவிரமடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரான துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக திமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், விக்கிரவாண்டி மக்களவை தொகுதியின் திமுக உறுப்பினர் புகழேந்தியும் தீவிர வாக்குசேகரிப்பில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தார்.

அதில், நேற்று நடைபெற்ற பிரசாரத்தில் கலந்து கொண்ட புகழேந்தி திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக உடன் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில் சென்னையிலிருந்து சிறப்பு மருத்துவக்குழுவினர் அவருக்கு சிகிச்சை அளிக்க வரவழைத்தனர். திமுக எம்எல்ஏ புகழேந்தி ஏற்கெனவே கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி உயிரிழந்தார். எம்எல்ஏவின் திடீர் மறைவு, திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மேலதிக செய்திகள்

உலகப் பொருளாதார மன்றம் ஜீவன் தொண்டமானை உலகளாவிய தலைவராக நியமித்துள்ளது.

பொன்னாவெளியில் டக்ளஸை விரட்டியடித்தனர் மக்கள்! வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது; அமைச்சரின் ஆதரவாளர்களும் ஓட்டம்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் அகிலனுக்கு அழைப்பாணை!

எது நடக்கும் என்று எதிர்பார்த்தோமோ அந்தத் துரதிர்ஷ்டம் நடந்தமை கவலை – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா விசனம் சுமந்திரனின் நிலைப்பாடு குறித்து எரிச்சல்.

இத்தகைய முன்மொழிவுகள் இயல்பானவை, பொது ஜனாதிபதி வேட்பாளர் முன்மொழிவு  தொடர்பில் மனோ கணேசன்.

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு – என்.ஐ.ஏ சார்பில் விளக்க அறிக்கை

தோ்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமா் குறித்து முடிவு: ராகுல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் பதட்டம் : போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

கல்வி அமைச்சின் இணையதளம் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவராலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளது.

மாட்டு திருடர்களுக்கு ஆப்பு : திருடும் ஒரு மாட்டுக்காக திருடனிடம் 10 லட்சம் அபராதத்துடன் சிறை.

Leave A Reply

Your email address will not be published.