ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

நிலமோசடி தொடர்புடைய பணமோசடி வழக்கில் தைதான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

அரசு நிலங்களை அபகரித்ததாகவும், தனியாருக்கு விற்றதாகவும் ஜாா்க்கண்ட் முதல்வரும், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன் மீது சுமார் ரூ.600 கோடி நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சாவி ரஞ்சன் உள்பட 14 போ் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் நடத்திய 7 மணி நேர விசாரணைக்குப் பின்னர், கடந்த புதன்கிழமை அமலாக்கத் துறையினரால் சோரன் கைது செய்யப்பட்டார். நேற்று ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

இதையடுத்து, ஹேமந்த் சோரனை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதியளித்துள்ளது.

மேலதிக செய்திகள்

ஈரானிய இலக்குகள் மீதான தொடர் தாக்குதல்களுக்கு அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுடன் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி.

ஜேர்மனியில் விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலைநிறுத்தம்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து.

போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகளை எமது புலனாய்வுப் பிரிவினர் அறிவர் – ஹிருணிகா

பெலியத்த ஐவர் கொலையின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் மனைவி மற்றும் தந்தை கைது.

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் நீதி நடவடிக்கைகளில் 703 சந்தேக நபர்கள் கைது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொதுச்செயலர் பதவியிலிருந்து அமரவீர, சுமதிபால இராஜிநாமா!

ஜனாதிபதி ரணிலுடன் தனிப்பட்ட சந்திப்புக்குத் தயாராகும் மொட்டு.

வவுனியா வைத்தியசாலையில் சிறை அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்ற சந்தேகநபர் தப்பியோட்டம்! – பொலிஸார் தீவிர தேடுதல்.

இலங்கையில் தேர்தல் ஒன்று விரைந்து நடத்தப்பட வேண்டும் இந்தியத் தூதுவருடனான சந்திப்பில் சந்திரிகா அம்மையார் வலியுறுத்து.

பொன்சேகா பொறுப்புடன் செயற்பட வேண்டும்! – சஜித்தின் கட்சி எச்சரிக்கை.

ஞானவாபி மசூதி வளாகத்தில் ஹிந்து கடவுள்களுக்கு பூஜை: நீதிமன்ற உத்தரவு வெளியான சில மணி நேரத்தில் நடத்தப்பட்டது

தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

பட்ஜெட் 2024: வல்லரசாக்குவோம் என்று அல்வா கிண்டியுள்ளார்கள் – உதயநிதி ஸ்டாலின்!

யாழ்.சிறைச்சாலையிலிந்து வெளிவந்து 3 நாட்களில் உயிரிழந்த இளைஞன் : மரணத்தில் சந்தேகம்

பெலியத்த ஐவர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் முன்னாள் IP : அடுத்தவர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர்

Leave A Reply

Your email address will not be published.