திருமலையில் தமிழரசின் நிர்வாகத்துக்கு எதிரான வழக்கு: இன்று நடந்தது என்ன?

யாப்பு விதி மீறல்களை ஒப்புக்கொள்கின்றது தமிழரசின் நிர்வாகம்! – எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து ஒழுங்காக நடத்த மன்றில் உறுதிமொழி.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டமையை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ள கட்சியின் நிர்வாகிகளான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் முடிந்த கட்சி நிர்வாகிகள் தெரிவுகளை எல்லாம் புறமொதுக்கி வைத்துவிட்டு, அனைத்து விடயங்களையும் ஆரம்பத்தில் இருந்து யாப்பு விதிகளுக்கு அமைய முன்னெடுக்கத் தயார் என நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கைக் கட்சியின் உறுப்பினரான பரா சந்திரசேகர் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் கட்சியின் தேசிய மாநாட்டுக்கும் நடந்து முடிந்த பொதுக்குழு மற்றும் மத்திய குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கும் தடை விதித்து நீதிமன்றம் கட்டாணை பிறப்பித்திருந்தமை தெரிந்ததே.

இன்று இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளிகளான சிறீதரன் எம்.பி. மற்றும் குகதாசன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வி.புவிதரனும் முன்னிலையாகினர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் ஆகிய எதிராளிகளின் சார்பில் சட்டத்தரணி பிரஷாலினி உதயகுமாரின் அனுசரணையுடன் சட்டத்தரணி ஆன் குலநாயகம் முன்னிலையானார்.

கட்சியின் யாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன என வழக்காளி குறிப்பிட்ட விடயங்களைத் தமது தரப்பினர் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும், ஆகையினால் கட்சி விடயங்களை ஆரம்பத்தில் இருந்து கட்சி யாப்புக்கு அமைய முன்னெடுக்கத் தாங்கள் தயார் என்றும் சிறீதரன், குகதாசன், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, வழக்காளிகளுக்கு அவர்கள் கோரிக்கைப் படி. நிவாரணம் வழங்க எதிராளிகள் இணங்குகின்றனர் எனவும், யாப்பு விதிகளுக்கு அமைய இனித் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் மீள எடுக்கப்படும் எனவும் அவர்கள் மன்றில் உறுதியளித்துள்ளனர்.

சத்தியலிங்கம் மற்றும் குலநாயகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தமது தரப்பினர் பதில் வாதங்களை எழுத்து மூல சமர்ப்பணங்களாக முன்வைக்கத் தயார் என்ற போதிலும், மற்றைய எதிராளிகளோடு ஒற்றுமைப்பட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்காக அவர்களின் கருத்தியலோடு இணங்கிப் போகத்தயார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதேவேளை, ஏழாவது எதிரியான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மன்றில் சமுகமளிக்காத காரணத்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More News
இன்றைய மேலதிக செய்திகள்

👉 அ.இ.ம.கா. கட்சியில் இருந்து முஷாரப் நீக்கப்பட்டமை சட்டத்துக்கு முரணானது! – உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு.

👉 யாழில் தனியாா் பஸ் உரிமையாளர்களின் போராட்டத்துக்கு இன்று மாலை தீர்வு உறுதி – வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.

👉 மன்னாரில் படையினர் அதிரடி வேட்டை! 53 ஆயிரம் போதை மாத்திரைகள் மீட்பு!!

👉 இ.போ.ச. பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தனியாா் பஸ் உாிமையாளா்கள் போராட்டம் – யாழ்ப்பாணத்தில் பயணிகள் பெரும் அசௌகரியம்.

👉 சகல தனியார் பஸ் சேவைகளும் வடக்கில் முற்றாக இடைநிறுத்தம் – வெறிச்சோடிக் காணப்படும் பஸ் நிலையங்கள்.

👉 சீனா-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் பலன்களைத் தரும்.

👉 பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் வரை 3 பில்லியன் டாலர் கடனை விடுவிக்கக் கூடாது.

👉 சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் உயர்மட்டக் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் ஆற்றிய உரை.

👉 வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு ஏற்பாடுகளை மேலும் துரிதப்படுத்த நடவடிக்கை.

👉 புதிய பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன் பதவியேற்றார்.

👉 முன்னாள் அமைச்சர் ரொனியின் பூதவுடல் ருஹுனு பல்கலைக்கழகத்திற்கு!

👉 புதிய பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

👉 அபாயம்.. இனி கங்கை புனித நதியில் நீராட வேண்டாம் – அதிர்ச்சி!

👉 சர்ச்சையை கிளப்பிய ராக்கெட் ஏவுதளம் விளம்பரம் – அமைச்சர் அனிதா விளக்கம்!

👉 மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் பலி!

👉 ரயில் மோதி தண்டவாளத்தில் நின்றிருந்த 12 பேர் பலி… ஜார்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

Leave A Reply

Your email address will not be published.